தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா பாதிப்பு 8.1 சதவீதமாகக் குறைந்துள்ளது: அமைச்சர் கே.என்.நேரு

8th Jun 2021 01:47 PM

ADVERTISEMENT

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிபகுதிகளில் கரோனா பாதிப்பு 8.1 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறை, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.இதன் பிறகு அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 13,087 பேரில் 9,131 பேர் குணமடைந்துள்ளதுடன், 356 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், உச்சகட்ட பாதிப்பாக மே 21 ஆம் தேதி 1,034 பேர் என்பது 54 சதவீதமாகும். இந்த பாதிப்பானது தற்போது படிப்படியாகக் குறைந்து 8.1 சதவீதமாக உள்ளது.  

கரோனா கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிடும் அமைச்சர் நேரு. உடன் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ்.

மேலும், இந்தத் தொற்றை முழுவதுமாக் குறைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே வேளையில், பொதுமுடக்கத்தால் காய்கறிகளை எவ்வாறு விற்பனைக்கு எடுத்துச் செல்வது, குடிநீர் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : Tiruppur K.N.Nehru
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT