தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கு ஜூலை 2 வரை 42.58 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு

8th Jun 2021 11:52 AM

ADVERTISEMENT

தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 42.58 லட்சம் கரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் பல தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

படிக்க: 45-60 வயதினருக்கு அதிகபட்சமாக 41.7% தடுப்பூசி: சுகாதாரத் துறை

இந்நிலையில், ஜூலை 2 வரை தமிழகத்திற்கு வரவுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை தற்போது வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து மருத்துவத் துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

ஜூன் 3 முதல் ஜூலை 2 வரை மொத்தம் 42,58,760 கரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

படிக்க: தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் தேவையில்லை: மா.சுப்பிரமணியன்

அதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த 13,43,820 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 3,30,560 கோவேக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த 21,55,180 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 4,29,200 கோவேக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona vaccine tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT