தற்போதைய செய்திகள்

தமிழகம் வருகிறது 1.03 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள்

8th Jun 2021 11:07 AM

ADVERTISEMENT

தமிழகத்திற்கு அடுத்த இரண்டு நாள்களில் 1.03 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் வரவுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் பல தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

படிக்க: 45-60 வயதினருக்கு அதிகபட்சமாக 41.7% தடுப்பூசி: சுகாதாரத் துறை

இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாளில் தமிழகத்திற்கு 1,03,370 கரோனா தடுப்பூசிகள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து வெளியான செய்தியில்,

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நாளை 63,370 கோவேக்சின் தடுப்பூசிகள் வரவுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நாளை 40,000 கோவேக்சின் தடுப்பூசிகள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : COVAXIN Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT