தற்போதைய செய்திகள்

வாணியம்பாடி அருகே காரை வழி மடக்கி ரூ.11 லட்சம் வழிப்பறி: மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை

DIN


வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே காரில் வந்த பைனான்சிரியரை இரவு நேரத்தில் வழி மடக்கிய கொள்ளையர்கள் 11 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்து தப்பித்து சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்து எஸ்பி நேரில் விசாரணை மேற்கொண்டார். 

நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஞானசேகரன். இவர் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் ஆகிய பகுதிகளில் பைனான்ஸ் கொடுத்து பணத்தை வசூல் செய்து வருகிறார். 

கொள்ளையர்கள் பயன்படுத்திய கார்

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஞானசேகரன் தனது காரில் ஓட்டுநர் பாலாஜி உட்பட 3 பேர் சென்று குடியாத்தத்தில் பணம் வசூல் செய்துக் கொண்டு நாட்டறம்பள்ளி நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது இரவு 11 மணியளவில் ஆம்பூரிலிருந்து பின் தொடர்ந்து வந்த கார் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் அருகே திடீரென ஞானசேகரனின் காரை வழி மடக்கியுள்ளனர். பிறகு மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கி பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் மர்ம நபர்களுக்கும், ஞானசேகரனின் ஓட்டுநர் பாலாஜிக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. இருந்த போதிலும் மர்ம நபர்கள் ஞானசேகரன் காரில் இருந்த ஒரு பையில் வைத்திருந்த 11 லட்சம் பணத்தை வழிப்பறி செய்து அவர்கள் வந்த காரில் தப்பிக்க முயன்றனர். 

இதனையறிந்த ஞானசேகரனின் கார் ஓட்டுநர் பாலாஜி மர்ம நபர்கள் வந்த காரின் சாவியை சட்டென்று எடுத்து அருகே இருந்த 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் அவ்வழியாக சென்றவர்கள் சம்பவ இடத்திற்கு அருகே கூடியதும் 4 மர்ம நபர்களும் காரை விட்டு விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தப்பித்துச் சென்றனர். இதில் காரில் மற்றொரு பையில் வைத்திருந்த ரூ.10 லட்சம் கொள்ளையர்களிடமிருந்து தப்பியது. 

இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி காவல்நிலையத்தற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் ஆம்பூர், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகளில் போலீஸார் உஷார் படுத்தப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். 

தகவலறிந்த எஸ்பி சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டார். காரில் வந்த கொள்ளையர்கள் காக்கி சட்டை அணிந்தும் போலீஸ் தொப்பி போல் போட்டுக் கொண்டு ஆயுதங்களுடன் இறங்கி மிரட்டியுதாகவும் கூறப்படுகிறது. மர்ம நபர்கள் வந்த காரை போலீஸார் கைப்பற்றி காரை சோதனை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் திருவள்ளுவர் பகுதியை சேர்ந்தவருடையது என்பதால் தனிப்படை போலீஸார் திருவள்ளுவர் விரைந்து சென்று கொள்ளையர்களையும், சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பைனான்சியர் காரை வழி மடக்கி பணம் வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT