தற்போதைய செய்திகள்

சங்ககிரி ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் 

17th Jul 2021 11:24 AM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் ஆடி மாத தொடக்கத்தினையொட்டி சுவாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது . 
 
ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில்  ஆடி மாத தொடக்கத்தினையொட்டி ஸ்ரீ ஓங்காளியம்மன் , ஸ்ரீ பேச்சியம்மன், மதுரைவீரன் சுவாமிகளுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  இதில் பக்தர்கள் கலந்து சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags : special poojas month of Aadi சிறப்பு பூஜை ஆடி மாத சிறப்பு பூஜைகள் 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT