தற்போதைய செய்திகள்

திருமுல்லைவாசலில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம் 

17th Jul 2021 10:25 AM

ADVERTISEMENT

 

சீர்காழி:  சுருக்குமடி பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதி,  21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த கோரி திருமுல்லைவாசலில் 20 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள். 

ADVERTISEMENT

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் திருமுல்லைவாசல் உள்ளிட்ட மீனவ கிராமத்தினர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுருக்குமடி பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதி கோரியும், 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த கோரியும் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் திருமுல்லைவாசல் , கூழையார் உட்பட 20 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

 

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ கிராம தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்.

அரசு சுருக்கு மடி வலை பயன்படுத்தி தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.

இதில் மீனவ கிராம தலைவர் மற்றும் பஞ்சாயத்தார், மீனவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர். இதேபோல் பூம்புகார் பகுதியிலும் , மடவா மேடு பகுதியிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது

Tags : Fishermen hunger strikes Thirumullaivasal உண்ணாவிரதப் போராட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT