தற்போதைய செய்திகள்

சந்திரபாடி - சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரி மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

17th Jul 2021 12:40 PM

ADVERTISEMENTதரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவர் கிராமத்தில் சுருக்கு மடி வலை பயன்படுத்தகோரி மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்திரபாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்துவரும் சுருக்குவலை தடை செய்யப்பட்ட தொழில் என்று கூறி தடை செய்ய நினைக்கும் தமிழக மீன்வளத் துறை மீன்வளத் துறை அதிகாரிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

பிற கிராமங்களில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர்களின் தூண்டுதலின் பெயரில் சுருக்குவலை தொழிலையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் நசுக்க நினைக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் உண்மையை கண்டிக்கிறோம்.

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 -இன்படி அனைத்து வகையான மீன் பிடித்த தொழில்களையும் முறை ஏற்படுத்த வேண்டும் மற்றும் அந்த தொழில்களில் உள்ள சட்ட விதி மீறல்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-இன்படி 21 வகையான சட்டத்தையும் உடனே அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : hunger strikes Fishermen hunger strikes உண்ணாவிரதப் போராட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT