தற்போதைய செய்திகள்

இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டும் 80 சதவீதம் பேருக்கு டெல்டா வகை தொற்று பாதிப்பு: ஐசிஎம்ஆர் தகவல்

17th Jul 2021 02:19 PM

ADVERTISEMENT


புதுதில்லி: இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் போது தடுப்பூசி போடப்பட்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் மாறுபட்ட டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் இருந்து பங்கேற்ற கரோனா பாதித்த 677  பேர்களிடம் செயல்திறன் மற்றும் மரபணு பகுப்பாய்வு நடத்தப்பட்டது. இதில் 71 பேர் கோவாக்சின் தடுப்பூசியையும், 604 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், இருவர் சீன சினோபார்ம் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டவர்கள். 

இந்நிலையில், தடுப்பூசி போட்ட நபர்களிடையே மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆய்வின் கரோனா பாதிப்புகளில் 9.8 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பாதிப்புகளில் 0.4 சதவிகிதம் பேர் மட்டுமே இறந்தனர். இருப்பினும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் இறப்பு விகிதத்தையும் குறைப்பதாகவும், குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பொருமாபாலானவர்கள் இரண்டாவது அலை பேரழிவின் போது 80.09 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களை மாறுபட்ட டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 482 பேரிடம் (71 சதவிகிதம்) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளுடன் காணப்பட்டனர். 29 சதவிகிதம் பேர் அறிகுறிகளற்றவர்களே காணப்பட்டனர்.

ADVERTISEMENT

அதில், காய்ச்சல் (69 சதவிகிதம்) உடல் வலி, தலைவலி மற்றும் குமட்டல் (56 சதவிகிதம்), இருமல் (45 சதவிகிதம்), தொண்டை புண் (37 சதவிகிதம்), வாசனை இழப்பு போன்றவை நிலையான அறிகுறியாகக் கண்டறியப்பட்டது. மற்றும் சுவை இழப்பு (22 சதவிகிதம்), வயிற்றுப்போக்கு (6 சதவிகிதம்), மூச்சுத் திணறல் (6 சதவிகிதம்) மற்றும் 1 சதவிகிதம் கண் எரிச்சல் மற்றும் சிவந்துபோதல் போன்றவை அறிகுறியாகக் கண்டறியப்பட்டது  என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மாறுபட்ட டெல்டா வகை கரோனா 111-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இது உலகம் முழுவதும் பரவும் தொற்றாக இருக்கும் என்றும், இதனால் கரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டும் தடுப்பூசிகளும் டெல்டா கோவிட் மாறுபட்ட டெல்டா வகை கரோனா தொற்றுக்கு எதிராக செயல்திறன் மிகுந்தது உறுதியாகியுள்ளது. 

Tags : Delta variant infected COVID-19 pandemic vaccine dose Second COVID 19 Wave
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT