தற்போதைய செய்திகள்

தடுப்பூசி போடுவதில் விழிப்புணர்வு: ஆர்வத்தோடு பங்கேற்ற பிராந்தியங்கரை கிராமத்தினர்

17th Jul 2021 11:18 AM

ADVERTISEMENTவேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை கிராமத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) காலை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கிராம மக்கள் காலையிலேயே குவிந்தது சுகாதாரத் துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.

மிகவும் பின்தங்கிய கிராமமான பிராந்தியங்கரை ஊராட்சியில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாம் தொடங்கிய 2 மணி நேரத்தில் 420 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

ADVERTISEMENT

பிராந்தியங்கரையில் வரிசையில் நின்று ஆர்வத்தோடு தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமத்தினர்.

ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்த நிலையல், காலையிலேயே வருகை தந்த மக்கள் வரிசையாக நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ஊராட்சித் தலைவர் கஸ்தூரி தலைமை வகித்து தடுப்பூசி போட்டுக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்தோடு வரிசையில் நிற்கும் பிராந்தியங்கரை கிராம மக்கள்.

மருத்துவர் ராம்குமார், ஆய்வாளர் கோதண்டபாணி, பாஸ்கர் உள்ளிட்ட மருத்துக் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

Tags : Awareness Vaccination  Awareness on Vaccination  தடுப்பூசி போடுவதில் விழிப்புணர்வு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT