தற்போதைய செய்திகள்

மேட்டூர் காவிரியில் ஆடி 1-ல் நீராடும் நிகழ்ச்சிக்கு தடை: வெறிச்சோடியது காவிரிக் கரை

17th Jul 2021 10:05 AM

ADVERTISEMENT

 

மேட்டூர் காவிரியில் ஆடி 1 இல்  நீராடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதால் வெறிச்சோடியது காவிரிக் கரை. 

ஆண்டுதோறும் ஆடி 1-ஆம் தேதி மேட்டூர் காவிரியில் 5 ஆயிரம் பேர் முதல் 10 ஆயிரம் பேர் வரை நீராடிச் செல்வார்கள். சேலம், ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஈரோடு, பவானி நாமக்கல் பகுதிகளிலிருந்தும் ஏராளமான புதுமணத் தம்பதியர் அருகம்புல் வைத்து நீராடுவதோடு, தங்களின் திருமண மாலைகளை பூஜித்து காவிரியில் விட்டுச்செல்வா். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்வா். அன்று அணைக்கட்டு முனியப்பனை தரிசிக்கவும், அணை பூங்காவைச் சுற்றிப் பாா்த்துவிட்டு குடும்பத்துடன் விருந்து உண்டு மகிழ்வார்கள். காவிரியில் நீராடவே மேட்டூரில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வெளியூர் வாசிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.

ADVERTISEMENT

அணைக்கட்டு பூங்கா

தற்போது தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மக்கள் அதிக அளவில் கூடினால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாமல் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக மேட்டூர் சார் ஆட்சியர் பிரதாப் சிங் சனிக்கிழமை (ஜூலை 17), ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) ஆகிய இரு தினங்களுக்கு  பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, மேட்டூர் அணை பூங்காவை மூடவும், காவிரியில் கூட்டம் கூட்டமாக வந்து நீராடும் நிகழ்ச்சிக்கும் தடை விதித்துள்ளார். 

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

இதனால் மக்கள் காவிரியில் குளிக்கும் இடங்களான காவேரிபாலம், மட்டம், முனியப்பன் கோவில் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

இந்த தகவல் தெரியாமல் மேட்டூர் வந்த வெளியூர் வாசிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மக்கள் கூட்டம் இல்லாததால் எப்போதும்  பரபரப்பாக காணப்படும் மேட்டூர் காவிரிக் கரையும், அணைக்கட்டு முனியப்பன் கோவில் பகுதி, பூங்கா பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Mettur Cauvery Audi 1 bans swimming show
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT