தற்போதைய செய்திகள்

தடுப்பூசி வழங்கிய மோடிக்கு நன்றி: நேபாள பிரதமர்

27th Jan 2021 02:58 PM

ADVERTISEMENT


நேபாளத்திற்கு கரோனா தடுப்பூசி வழங்கிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

கரோனா இடா்பாட்டு காலத்தில் அண்டை நாடுகளுக்கு உதவும் விதமாக மானிய உதவியின் கீழ் இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு வருகின்றது.

இதையடுத்து நேபாளத்துக்கு கடந்த வாரம் 10 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியது.

இதுகுறித்து நேபாள பிரதமர் கூறியதாவது,

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசியை விரைவாக விநியோகிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு உதவிய அண்டை நாடான இந்திய மக்கள் மற்றும் முக்கியமாக பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி விநியோகிக்க ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் எங்களுக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT