தற்போதைய செய்திகள்

கரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு: கேரள முதல்வர்

ANI

கேரளத்தில் கரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதன்கிழமை மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க காவல்துறையினரை நியமிக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.  

மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பிப்ரவரி 15க்குள் நோய்ப் பரவுவதைக் குறைக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாக முதல்வர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT