தற்போதைய செய்திகள்

அசாமில் படகு விபத்து: 4 பேர் பலி

27th Jan 2021 05:13 PM

ADVERTISEMENT

அசாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளதாக துணை ஆணையர் புதன்கிழமை தெரிவித்தார்.

கிழக்கு அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் செவ்வாய்க்கிழமை 14 பேர் பயணித்த சுற்றுலாப் படகு கவிழ்ந்துள்ளது. 

இதுகுறித்து ஜோர்ஹாட் துணை ஆணையர் ரோஷ்னி அபரஞ்சி கோராட்டி கூறுகையில்,

செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்த பயணிகள் 14 பேர் ஒரு சிறிய நாட்டு படகில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது, இந்த விபத்து அதிக சுமை காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.

ADVERTISEMENT

இந்த விபத்தில் மீட்கப்பட்ட 10 பயணிகள் ஜோர்ஹாட் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காணாமல் போன 4 பேரின் சடலங்கள் பாக்மோரா சுற்றுலா இடத்திற்கு அருகே மாநில பேரிடர் மீட்புப்ப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் பபன் ராய் (30), ராஜியா டிகுலா (24), சாஹில் சவுகான் (15), மற்றும் சுஃபியன் செளகான் (9) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

15 நாள்களுக்குள் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : boat capsized
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT