உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில், கடத்தப்பட்ட சிறுமி உள்பட 3 பேர் பலியானதாக புதன்கிழமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பிதெளலி அருகே திங்கள்கிழமை இரவு யமுனா ஆற்றின் பாலத்தைக் கடக்கும் போது, பாலத்திலிருந்து கார் கவிழ்ந்ததில் ஒரு சிறுமி, 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அபர்ணா கெளதம் கூறியதாவது,
திங்கள்கிழமை இரவு பாண்டூன் பாலத்தைக் கடக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சிறுமி, இரண்டு இளைஞர்களின் உடல் மீட்கப்பட்டது, மேலும் இரண்டு இளைஞர்கள் மயக்கத்துடன் இருந்தனர் என்று தெரிவித்தார்.
இதனிடையே, உயிரிழந்த 13 வயது சிறுமியின் தந்தை, தனது மகளை சுன்முன் திவாரி என்பவர் கடத்தியதாக புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.