தற்போதைய செய்திகள்

குடியரசு தினம்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து

26th Jan 2021 05:07 PM

ADVERTISEMENT

குடியரசு தினத்தை முன்னிட்டு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.  

1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றி வைத்தார்.

ADVERTISEMENT

Tags : Vladimir Putin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT