தற்போதைய செய்திகள்

தில்லியில் மேலும் 157 பேருக்கு கரோனா தொற்று

26th Jan 2021 05:59 PM

ADVERTISEMENT

 

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 157 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 157 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,34,229 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,820 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்றில் இருந்து 218 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,21,783 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,626 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT