தற்போதைய செய்திகள்

நாட்டில் 20.39 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை

26th Jan 2021 09:43 PM

ADVERTISEMENT

 

நாட்டில் இதுவரை 20.39 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கின. நேற்று வரை நாடு முழுவதும் 19,50,183 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று மாலை 7 மணிவரை நிலவரப்படி 20.39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி 20.39 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT