தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் 6,849 பறவைகள் பலி

26th Jan 2021 07:44 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் 6,849 பறவைகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஹரியாணா, கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.

புலம்பெயர் பறவைகளால் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற பறவைகளுக்கும் தொற்று பரவி வருகின்றது. இதை தடுக்கும் வகையில் உயிரிழந்த பறவைகள் கண்டெடுக்கும் சுற்றுப் புறத்தில் உள்ள அனைத்து பறவைகளையும் அழித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 6,849 பறவைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட செய்தியில்,

மாநிலத்தில் டிசம்பர் 25, 2020 முதல் ஜனவரி 26, 2021 வரை ஒரு மாநிலத்தில் 6,849 பறவைகள் உயிரிழந்துள்ளன. இறந்த பறவைகளில் 4,799 காகங்கள், 409 மயில்கள், 583 புறாக்கள் மற்றும் 1,058 பிற பறவைகள் ஆகும். 

மேலும் பறவைக் காய்ச்சலானது, மாநிலத்தில் உள்ள 17 மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Tags : bird flu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT