தற்போதைய செய்திகள்

கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 6 பேர் பலி

26th Jan 2021 06:36 PM

ADVERTISEMENT

 

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கிய இரண்டு சம்பவங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் விவேகன் (3), அதே பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் மகன்கள் விக்னேஸ்வரன் (3), சர்வேஸ்வரன் (3). இவர்கள் இரட்டையர்கள். திங்கள் கிழமை மாலையில் மூன்று பேரும் அந்த பகுதியில் விளையாடி உள்ளனர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள குளத்தின் கரையில் குழந்தைகள் நடந்து சென்ற கால் தடங்கள் இருந்தன. எனவே குளத்தில் இறங்கி குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், திங்கட்கிழமை இரவில் சர்வேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்றொருவரை தேடும் பணி நள்ளிரவை தாண்டியதும் நிறுத்தப்பட்டு இன்று காலையில் துவங்கியது. அதில் விவேகனும் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.      
 

ADVERTISEMENT

மற்றொரு சம்பவம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏ.புதூரைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் மகள் புவனேஸ்வரி (19),  லட்சபூபதி மகள்கள்
நந்தினி (18), வினோதினி (16). மூன்று பேரும் இன்று மதியம் ஏ.புதூர் - சித்தேரி குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

தகவலறிந்த காடாம்புலியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் சடலங்களையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணைக்கு நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT