தற்போதைய செய்திகள்

'வேலைக் கையில் எடுத்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது':  ஜி.கே.வாசன்

25th Jan 2021 07:35 PM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: வேலைக் கையில் எடுத்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை செய்தியாளரிடம் அவர் தெரிவித்தது:

ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறுவது ஏற்புடையதல்ல. அது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

வேலைக் கையில் எடுத்தால் வென்றுவிடலாம் என எதிர்க்கட்சி நினைத்துக் கொண்டுள்ளது. வேலை கையில் எடுத்தவர்கள் எல்லாம் தேர்தலிலே ஒருபோதும் வெற்றி பெற்றுவிட முடியாது. வேலுக்குப் பக்தியுடன் மரியாதை செலுத்துபவர்கள்தான் வெல்ல முடியும்.

ADVERTISEMENT

சூரசம்ஹாரத்தை பொருத்தவரையில், அதில் நம்பிக்கை உள்ளதாக திமுக சொல்வதே, தேர்தலில் வாக்குக்காகக் கூறுவதாகத் தெரிகிறது. மக்களின் பக்தியைத் தேர்தல் வாக்குக்காக யாரும் ஏமாற்றிவிட முடியாது என்றார் வாசன்.

Tags : G.K.Vasan
ADVERTISEMENT
ADVERTISEMENT