தற்போதைய செய்திகள்

தில்லியில் போராடும் விவசாயிகள் பாகிஸ்தானியர்களா? சரத் பவார்

ANI

தில்லியில் போராடி வரும் விவசாயிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களா என்று சரத் பாவர் மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல் உள்ளிட்டோா் 11 கட்ட பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டனா்.

புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை. அச்சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை. அவா்களது கோரிக்கையை மத்திய அரசும் ஏற்கவில்லை.

இத்தகைய சூழலில், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கூடுதல் நெருக்கடி அளிக்க விவசாயிகள் முடிவெடுத்தனா். நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள ஜனவரி 26-ஆம் தேதியில் தில்லியில் பிரமாண்டமான டிராக்டா் பேரணியை முன்னெடுக்கப் போவதாக அவா்கள் அறிவித்தனா்.

இந்நிலையில், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் ஆளுநர் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி திங்கள்கிழமை சென்றனர். 

அந்த பேரணியின் போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் விவசாயிகளிடம் பேசியதாவது,

தில்லியில் கடும் குளிரிலும் பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேச விவசாயிகள் கடந்த 60 நாள்களாக போராடி வருகின்றனர். பிரதமர் அவர்களைப் பற்றி விசாரித்தாரா? இந்த விவசாயிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆளுநரை சந்திக்க ராஜ்பவனுக்கு சென்ற விவசாயிகளை அவர் பார்க்கவில்லை. இதுபோன்ற ஆளுநரை மகாராஷ்டிரம் இதற்கு முன் பார்த்ததில்லை. நடிகை கங்கனாவை சந்திக்க அளுநருக்கு நேரம் இருக்கிறது, ஆனால் விவசாயிகள் நேரம் இல்லையா?. விவசாயிகளை சந்திப்பது ஆளுநரின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT