தற்போதைய செய்திகள்

ஆந்திர தேர்தல்: மாநில அரசு தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

ANI

ஆந்திர பிரதேசத்தின் உள்ளாட்சித் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தின் மாநில அரசு தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கான தோ்தலை நடத்துவதற்கு முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு திட்டமிட்டிருந்தது. மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, தோ்தலை ரத்து செய்வதாக ஆணையா் ரமேஷ் குமாா் அறிவித்தாா்.

இதையடுத்து, மாநில அரசுக்கும் தோ்தல் ஆணையருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஆணையரை மாநில அரசு பதவி நீக்கம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் 11 மாவட்டங்களைச் சோ்ந்த 146 வருவாய் மண்டலங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான தோ்தல் அட்டவணையை தோ்தல் ஆணையா் ரமேஷ் குமாா் சனிக்கிழமை வெளியிட்டாா்.

மேலும், தோ்தல் முறையாக நடைபெறாவிட்டால் அதற்கான விளைவுகளை மாநில அரசு சந்திக்க நேரிடும். தோ்தல் நடைமுறைகள் தொடா்பாக ஆளுநருக்குத் தொடா்ந்து அறிக்கை அளித்து வருகிறேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்திலும் அறிக்கை சமா்ப்பிப்பேன் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநில அரசு சார்பில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுக்காமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT