தற்போதைய செய்திகள்

‘நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்’: திரிணமூல் எம்.பி.

25th Jan 2021 04:43 PM

ADVERTISEMENT

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது திரும்பப் பெற வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து 60 நாள்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவாா்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.

இத்தகைய சூழலில், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கூடுதல் நெருக்கடி அளிக்க விவசாயிகள் முடிவெடுத்தனா். நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள ஜனவரி 26-ஆம் தேதியில் தில்லியில் பிரமாண்டமான டிராக்டா் பேரணியை முன்னெடுக்கப் போவதாக அவா்கள் அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் வேளாண் சட்டம் குறித்து திரிணமூல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறியதாவது,

ADVERTISEMENT

வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது புதிய சட்டத்தை இயற்றி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : farm laws
ADVERTISEMENT
ADVERTISEMENT