தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ராஜீவ் பானர்ஜி ராஜிநாமா

22nd Jan 2021 02:57 PM

ADVERTISEMENT

மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ராஜீவ் பானர்ஜி(47) தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

ராஜீவ் பானர்ஜி தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் ஜகதீப் தன்கருக்கும் அனுப்பியதையடுத்து, அவரது ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவர் ராஜிநாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது,

மேற்கு வங்க மக்களுக்கு சேவை செய்தது மிகப் பெரிய மரியாதையாக கருதிகிறேன். இந்த வாய்ப்பைப் பெற்றமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த சில வாரங்களுக்கு முன் மம்தா பானா்ஜி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். பின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த  லக்ஷ்மி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை மட்டும் ராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒரு அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT