தற்போதைய செய்திகள்

ஹைதராபாத் மாநகராட்சி: பிப்.11-ல் மேயர், துணை மேயர் தேர்வு

22nd Jan 2021 06:50 PM

ADVERTISEMENT

ஹைதராபாத் மாநகராட்சிக்கான மேயர் மற்றும் துணை மேயர் பிப்ரவரி 11ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற்றது. அதில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (56), பாஜக (48),  அசாதுதீன் ஓவைசியின் கட்சி (44) இடங்களில் வென்றது.

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற உறுப்பினர்களால் மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த தேர்தல் பிப்ரவரி 11ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

ஹைதராபாத் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர்களுக்கான தேர்தல் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும். தேர்தலுக்கான நோட்டீஸை அனைத்து உறுப்பினர்களுக்கும் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும்.

அட்டவணையின்படி, ஹைதராபாத் மாநகராட்சிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பிப்ரவரி 11 அன்று காலை 11 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள். அதே நாளில், மதியம் 12.30 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடைபெறும். அதில், மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : hyderabad corporation
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT