தற்போதைய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: பஞ்சாப் முதல்வர்

22nd Jan 2021 09:08 PM

ADVERTISEMENT

தில்லியில் நடக்கும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 59-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் போது குளிர் தாங்காமல் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது 76 விவசாயிகள் இறந்துள்ளனர். தில்லி எல்லைகளில் போராட்டத்தில் உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நாங்கள் அரசு வேலை வழங்குவோம் என்று அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : Captain Amarinder Singh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT