தற்போதைய செய்திகள்

சீரம் நிறுவனத்தில் தடவியல் குழு ஆய்வு

22nd Jan 2021 03:53 PM

ADVERTISEMENT

சீரம் நிறுவனத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து குறித்து மகாராஷ்டிர தடவியல் நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு எனும் கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து வரும் சீரம் நிறுவனத்தின் புணே உற்பத்தி மையத்தில் ஒரு கட்டடத்தின் 4 மற்றும் 5வது மாடியில் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த 10 தீயணைப்பு வாகனங்களைச் சேர்ந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தி மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இதில் 5 பேர் பலியாகினர்.

இந்த விபத்து மின்கசிவால் ஏற்பட்டது என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள நிலையில் இன்று மாநில தடவியல் நிபுணர்கள் குழு விபத்து நடந்த பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

 

Tags : Serum Institute
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT