தற்போதைய செய்திகள்

விரைவில் காங்கிரஸ் தலைவர் தேர்வு: கே.சி.வேணுகோபால்

22nd Jan 2021 03:24 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வருகின்ற ஜூன் மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம், குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிரேக்டர் பேரணி, மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள், காங்கிரஸ் உள்கட்சி தேர்தல்கள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

Tags : Congress president
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT