தற்போதைய செய்திகள்

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.26.59 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

DIN

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நவம்பர் 26-ஆம் தேதி நிவர் புயல் கரையைக் கடந்தது. இதில் தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் சேதங்களைச் சந்தித்தன.

இதையடுத்து நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26.59 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது,

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.16.08 கோடி, தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.10.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணமாக ரூ. 10 ஆயிரமும், நெற்பயிர், நீர்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ. 20 ஆயிரமும் வழங்கப்படும்.

மேலும், பல்லாண்டு கால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ. 25 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT