தற்போதைய செய்திகள்

சசிகலாவிற்கு கரோனா தொற்று? ஐசியூ-வில் தொடர் சிகிச்சை

21st Jan 2021 09:47 PM

ADVERTISEMENT

சசிகலாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நுரையீரலில் தீவிர தொற்று, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவா் பெங்களூரு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சி.டி. ஸ்கேன் எடுக்கும் வசதி அம்மருத்துவமனையில் இல்லை என்பதால், விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டார்.

ADVERTISEMENT

வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சசிகலாவிற்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டதில் தீவிர நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags : sasikala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT