தற்போதைய செய்திகள்

மாலத்தீவு, பூடானுக்கு தடுப்பூசி வழங்கிய இந்தியா

ANI

இந்தியாவில் இருந்து மாலத்தீவு, பூடனுக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் அந்நாடுகளுக்கு சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில் முதற்கட்டமாக பூடான் மற்றும் மாலத்தீவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பூசிகள் புதன்கிழமை சென்றடைந்தது.

மாலத்தீவு சென்றடைந்த தடுப்பூசிகள்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது,

நட்பு நாடுகளுக்கான எடுத்துக்காட்டாக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் மாலத்தீவு மற்றும் பூடானை சென்றடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாளை அனுப்பப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT