தற்போதைய செய்திகள்

எம்பிக்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: மக்களவைத் தலைவர்

ANI

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடா் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது மாா்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா்.

இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியதாவது,

கரோனா பரவலுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29ஆம் தேதி முதல் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில், மாநிலங்களவை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை, மக்களவை மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெறும். கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம்பெறும்.

மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உணவகத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT