தற்போதைய செய்திகள்

தில்லி காவல்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

ANI

தில்லி காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விவகாரத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற 9 கட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்தவித சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை.

இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கில் நாட்டின் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள வரும் 26-ஆம் தேதி டிராக்டா் பேரணியை நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்தனா்.

குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக டிராக்டா் பேரணியை விவசாயிகள் நடத்தவுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய மத்திய அரசு, தில்லி காவல்துறை மூலமாக அப்பேரணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விவசாயிகளின் டிரேக்டர் பேரணி குறித்து தில்லி காவல்துறையே முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

இந்நிலையில், தில்லி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT