தற்போதைய செய்திகள்

புதுவை சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

DIN

புதுச்சேரியின் சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவையானது 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். இந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் சட்டப்பேரவை கூடியது.

இந்த கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண் சட்ட நகல்களை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையின் போது கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்குமுன் பஞ்சாப், கேரளம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT