தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் 3 பேருக்கு புதிய வகை கரோனா

18th Jan 2021 05:30 PM

ADVERTISEMENT

நேபாளம் நாட்டில் பிரிட்டனில் இருந்து வந்த 3 பயணிகளுக்கு புதிய வகை கரோனா வைரஸின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில், பிரிட்டனிலிருந்து சமீபத்தில் நேபாளம் வந்த 3 பயணிகளுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேபாளம் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

பிரிட்டனிலிருந்து நேபாளம் வந்த பயணிகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 28 வயதுடைய ஒரு பெண், 67 மற்றும் 32 வயதுடைய இரு ஆண்களுக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : nepal coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT