தற்போதைய செய்திகள்

நாட்டில் மேலும் 1.48 லட்சம் பேருக்கு தடுப்பூசி

18th Jan 2021 07:42 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 3 நாள்களில் 3,72,567 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கின. முதல் 2 நாள்களில் நாடு முழுவதும் 2.24 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மூன்றாவது நாளில் 1,48,266 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

இன்று 1,48,266 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2 நாள்களில் தடுப்பூசி போடப்பட்டவர்களில் 580 பேருக்கு பக்கவிளைவுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஜனவரி 16ஆம் தேதி கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர். அதில், உத்தரபிரதசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் ஜன.17 மாலை உயிரிழந்துள்ளார். அவரது பிரேத பரிசோதனை முடிவில் தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த 43 வயதுடையவர் ஜன.18 உயிரிழந்துள்ளார். அவருக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT