தற்போதைய செய்திகள்

‘கேரளத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை’: மத்திய அமைச்சர்

ANI

கேரள மாநிலத்தில் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான வி.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கேரளத்தில் அதிகரித்து வருகின்றது.

இதுகுறித்து கேரள பாஜக தலைவர் கூறியதாவது,

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. மாநில அரசு தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை. தற்போது கரோனா அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் உள்பட பல துறைகளை அரசு திறந்து வருகின்றது. மாநில அரசு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

கேரளத்தில் இதுவரை 8,31,260 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 3,392 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT