தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் உடல்நிலை முன்னேற்றம்

13th Jan 2021 03:34 PM

ADVERTISEMENT

மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து கோவா முதல்வர் கூறியதாவது,

மத்திய அமைச்சர் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது. செயற்கை சுவாசக் கருவியிலிருந்து அதிக ஓட்டம் கொண்ட ஆக்ஸிஜனுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இன்று காலை அவரை பரிசோதனை செய்தார்கள். அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவா மருத்துவர்கள் அவரை கண்காணிப்பார்கள் என்று கூறினார்.

ஸ்ரீபாத் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர் ராஜேஸ்வரி கூறுகையில்,

"அவரது சுவாசம், இரத்த அழுத்தம் மற்றும் பிற உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளது" என்று மதிப்பீடு செய்த பின்னர் கூறினார் .

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி பாஜக எம்.பி.யுமான ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக், தனது மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் உள்ளிட்ட 4 போ் கோவாவில் இருந்து கா்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டத்திலுள்ள எல்லாப்பூா் சென்றுள்ளனா். எல்லாப்பூரில் இருந்து திங்கள்கிழமை இரவு கோகா்ணாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனா். அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் திடீரெனக் கவிழ்ந்துள்ளது. இதில் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோா் படுகாயமடைந்தனா்.

இதனிடையே, சிகிச்சை பலனளிக்காமல் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

Tags : Shripad Naik
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT