தில்லியில் ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின், மத்திய அரசு அளிக்கப்பட்ட தளர்வை அடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தில்லி அரசு வெளியிட்ட செய்தியில்,
பள்ளிகளின் இறுதித் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிக்கு அழைக்க வேண்டும்.
ADVERTISEMENT
பெற்றோர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு அனுப்பலாம். வருகைப் பதிவிற்காக பள்ளிக்கு வர நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.