தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 7 பேர் பதவியேற்பு

13th Jan 2021 04:59 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர் எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் எம்.டி.பி.நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரணி, ஆர்.சங்கர், சிபி யோகேஸ்வர், அங்காரா எஸ் ஆகிய 7 பேருக்கு கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

 

Tags : Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT