தற்போதைய செய்திகள்

போகி: வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் கொண்டாட்டம்

13th Jan 2021 06:40 PM

ADVERTISEMENT

போகிப் பண்டிகையை முன்னிட்டு தில்லியில் போராடும் விவசாயிகள் மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடினார்கள்.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்பாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 50 நாள்களாக தொடர்ந்து தில்லியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், போகிப் பண்டிகையை முன்னிட்டு வேளாண் சட்ட நகல்களை தில்லி, ஹரியாணா எல்லைகளில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் எரித்துக் கொண்டாடினார்கள்.

ADVERTISEMENT

ஜந்தர் - மந்தரில் போராடி வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேளாண் சட்ட நகல்களை எரித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டு, விவசாயிகளுடன் பேச குழு அமைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : farm law
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT