தற்போதைய செய்திகள்

பெருமாநல்லூர் அருகே துணி உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து

13th Jan 2021 06:49 PM

ADVERTISEMENT

அவிநாசி: பெருமாநல்லூர் அருகே துணி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீபத்தில் பல கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேமடைந்தது. 

பெருமாநல்லூர் அய்யம்பாளையம் அருகே பொங்குபாளையம் பகுதியில் துணி உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை காலை இந்நிறுவனம் வழக்கம் போல இயங்கத் துவங்கியது. புதன்கிழமை மாலை, திடீரென இந்நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு, தீ மிக வேகமாக பரவி அங்கு அடுக்கி வைத்திருந்த துணி, நூல், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரியத் துவங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை விரைந்து அணைத்து வருகின்றனர். இருப்பினும் உள்ளிருந்த இயந்திரங்கள், துணி, நூல் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.

ADVERTISEMENT

மேலும் இவ்விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷடவசமாக எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.  இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Tiruppur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT