தற்போதைய செய்திகள்

தாமிரவருணியில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றம்

13th Jan 2021 04:33 PM

ADVERTISEMENT

நெல்லையில் உள்ள 5 அணைகளிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

இதையடுத்து, நேற்று முதல் பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமாநதி சேர்வலாறு அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், தற்போது 5 அணைகளிலிருந்து 50,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது. அதிகபட்சமாக மணிமுத்தாறிலிருந்து 25,000 கனஅடி மற்றும் பாபநாசத்தில் 23,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

Tags : Thamirabarani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT