கேரளத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான மத்தியக் குழு நாளை(வெள்ளிக்கிழமை) செல்கிறது.
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி அந்தக் குழு வெள்ளிக்கிழமை கேரளம் சென்றடைகிறது.
கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் இரண்டு நாள்கள் ஆய்விற்கு பிறகு திங்கள்கிழமை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
கரோனாவை எதிர்கொள்வதில் மாநில பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, அதுசார்ந்த நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இந்தக் குழு உதவவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாள்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சுகாதாரப் பணியாளர்களுக்கு போடுவதற்காக 5 லட்சம் கரோனா தடுப்பூசி வேண்டுமென்று மத்திய அரசிற்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.