தற்போதைய செய்திகள்

மேற்குவங்க தேர்தல்: காங்கிரஸ் - இடதுசாரிகள் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை

7th Jan 2021 05:12 PM

ADVERTISEMENT

நடைபெற உள்ள மேற்குவங்க பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து வியாழக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

இதையடுத்து, மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் தரப்பில் ஆதிர் ரஞ்சன் செளத்ரி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவையும் அறிவித்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் தொகுதி பங்கீடு குறித்து இடதுசாரி தலைவர்களுடன் காங்கிரஸினர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT