தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 3.72 கிலோ தங்கம் பறிமுதல்

7th Jan 2021 07:19 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பிலான 3.72 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக கடத்தல் தங்கங்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

சென்னை விமான நிலையத்தில் துபை மற்றும் சார்ஜா விமானங்களில் வந்த பயணிகளிடமிருந்து 3.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்ததில், சாக்லேட் கவருக்குள் மறைத்து வைத்து 660 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

மேலும், திரைப்படத்தில் வருவதைப் போல 15 பயணிகளின் வயிற்றிலிருந்து 3.18 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 3.72 கிலோ எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ. 1.97 கோடி ஆகும்.

 

Tags : Gold Seized
ADVERTISEMENT
ADVERTISEMENT