தற்போதைய செய்திகள்

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(ஜன.7) ஹர்ஷ் வர்தன் ஆலோசனை

6th Jan 2021 07:05 PM

ADVERTISEMENT

அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(வியாழக்கிழமை) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை அனைத்து மாநிலங்களும் கடந்த ஜனவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 8ஆம் தேதி ஒத்திகை நடக்கவுள்ளது.

அதற்கு முன்பாக, அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(வியாழக்கிழமை) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Harsh vardan
ADVERTISEMENT
ADVERTISEMENT