தற்போதைய செய்திகள்

நாளை(ஜன.5) இலங்கை செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

4th Jan 2021 04:26 PM

ADVERTISEMENT

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை(செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில், ஜனவரி 5 முதல் 7ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த பயணத்தின் போது, இரு நாட்டு உறவுக் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : Jaishankar
ADVERTISEMENT
ADVERTISEMENT