தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் திறப்பு

4th Jan 2021 03:29 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் பள்ளிகள் ஜனவரி 18ஆம் தேதி முதல் படிப்படியாக திறக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கரோனா 2ஆம் அலை தாக்கத்தால் மீண்டும் நவம்பர் 26ஆம் தேதி பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் வருகின்ற ஜனவரி18ஆம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் கல்வித்துறை அமைச்சர் ஷப்கத் மஹ்மூத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

ADVERTISEMENT

பாகிஸ்தானில் முதல் கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 18ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படும் எனக் கூறினார்.

Tags : Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT