தற்போதைய செய்திகள்

புதிய வகை கரோனா: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 38ஆக உயர்வு

4th Jan 2021 04:05 PM

ADVERTISEMENT

இந்தியாவில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

புதிய வகை கரோனா கண்டறியப்பட்ட 38 பேரில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம், பிரிட்டனில் புதிய வகை அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிக தடைவிதித்து, சமீபகாலமாக பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவர்களுடன் தொடார்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதில், கரோனா கண்டறியப்படுவோரின் சளி மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. அந்த சோதனை செய்ததில், இதுவரை 38 பேருக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் அந்தந்த மாநிலங்களில் தனிமைப்படுத்தும் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT